Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

மவுலிவாக்கமும்... உலக அளவிலான 10 உள்வெடிப்பும்!


சென்னை புறநகர்ப் பகுதியான மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அரசு விதிமுறைகளை மீறி இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், பணிகள் முடிவடையும் முன்பே ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், பெரும் அச்சுறுத்தலுடன் இருந்த மற்றொரு கட்டடம் இன்று மாலை இடிக்கப்பட உள்ளது. இதற்காக 70 கிலோ வெடிபொருட்கள், கட்டடத்தின் 150 இடங்களில் நிரப்பப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள 200 மீட்டர் பகுதிகள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மவுலிவாக்கம் கட்டடம் போல், உலகம் முழுவதிலும் தகர்க்கப்பட்ட 10 கட்டிடங்களின் தொகுப்பு இங்கே..

1) அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்த லாண்ட் மார்க் ஹோட்டல் 1969-ம் ஆண்டு கட்டப்பட்டது. 525 அறைகள் கொண்ட இந்தப் பிரம்மாண்ட ஹோட்டல், போதிய லாபம் இல்லாததால் 1990-ம் ஆண்டு வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது.




2) அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 1971-ம் ஆண்டு பல்நோக்கு மைதானம் கட்டப்பட்டது. 32 ஆண்டுகள் பழமையான இந்த மைதானம் 2004-ம் ஆண்டு தகர்க்கப்பட்டது. இ்தைத் தகர்க்க வெறும் 62 வினாடிகளே ஆனது.



3) அமெரிக்காவில் 1958-ம் ஆண்டு 63 ஏக்கர் பரப்பளவில் ஸ்டார்டஸ்ட் ஹோட்டல் கட்டப்பட்டது. இது, 2007-ம் ஆண்டு வாணவேடிக்கைகளுடன் கண்கவர் வகையில் இடிக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் தகர்க்கப்பட்ட கட்டடம் இதுவே.



4) Rhode Island-ல் உள்ள ஜெம்ஸ்டவின் பாலம் 1940-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் வலுவிழந்ததால் தகர்க்கப்பட்டது.





5) அமெரிக்காவில் கட்டப்பட்ட ‘ஓசன் டவர்’ அபார்ட்மென்ட், 31 மாடிகளைக் கொண்டது. இது, அரசு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதால், முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன்பே இடிக்கப்பட்டது.





6) பிரேசிலில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில், பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததால் தகர்க்கப்பட்டது. இதைத் தகர்க்க 30 வினாடிகளே ஆனது.



7) ஆஸ்திரேலியாவில் கட்ட்ப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டடத் தூண்களில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டது. ஆனால், வெடி வெடித்தபோது கட்டடத்தின் தரைத்தளம் மட்டுமே தகர்ந்தது. பிறகு ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடம் சாய்க்கப்பட்டது.







8) 1997-ம் ஆண்டு கனடாவில் இருந்த பழமையான Stelco இரும்பு ஆலை தகர்க்கப்பட்டது.





9) அமெரிக்காவின் உயரமான சூப்பர் மார்க்கெட் 1998-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இது அமைந்திருந்ததால், பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் தகர்க்கப்பட்டது.





10) தென் ஆப்ரிக்காவின் ஏத்லோன் மின் நிலையத்தில் உள்ள இரண்டு குளிர்ச்சி டவர்கள், பாதுகாப்புப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.