Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

ஆந்திர மருத்துவ மாணவர்களுக்கு திருவள்ளூரில் நேர்ந்த சோகம்..! பதற வைத்த கொண்டாட்டம்


ஆந்திர மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட சென்னையில் காரில் வந்தபோது விபத்தில் சிக்கினர். இதில் நண்பர்கள் கண் எதிரில் இரண்டு மாணவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் சிங் என்ற மாணவனுக்கு இன்று பிறந்தநாள். இதைக்கொண்டாட நேற்றிரவு மூன்று கார்களில் 15 மாணவர்கள் சென்னைக்கு வந்தனர். முதல் காரில் மாணவர்கள் ஜெகதீஷ், அரிநாத், ஜோதி தருப், பிரணாப்ரெட்டி, சுதர்சனம், சிவசாய் கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர். மூன்றாவது காரில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர் சிங், நண்பர்களுடன் இருந்தார்.  திருவள்ளூர் அருகே புதூர் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிரே திருத்தணி நோக்கி சென்ற 108 ஆம்புலன்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி சாலையிலிருந்து பள்ளத்துக்குள் பாய்ந்தது.

காருக்குள் இருந்த மாணவர்களும், ஆம்புலன்ஸ் டிரைவர் திருத்தணியை சேர்ந்த முனிரத்னமும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த மாணவர்களையும், ஆம்புலன்ஸ் டிரைவர் முனிரத்னத்தையும் சிகிச்சைக்காக போலீஸார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாணவர்கள் சுதர்சனம், சிவசாய்கிருஷ்ணா ஆகியோர் பலியாகினர். மேல் சிகிச்சைக்காக மாணவர்களும், ஆம்புலன்ஸ் டிரைவர் முனிரத்னமும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் ஜெகதீஷ், அரிநாத், ஜோதி சருப், பிரணாப்ரெட்டி ஆகியோருக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இரண்டு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பணிகள் முடியாமல் ஆங்காங்கே உள்ளன. இதுவே விபத்துக்கு முக்கிய காரணம். பாலப்பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே எந்தவித அறிவிப்பும் இல்லை. நேற்று நடந்த விபத்தின் அருகேயேயும் ஒரு பாலப்பணிகள் நடந்துள்ளது. எனவே பாலப்பணிகளையும், நெடுஞ்சாலை பணிகளையும் உடனடியாக முடித்தால் மட்டுமே விபத்துகள் நடைபெறாது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கியதும் அடுத்தடுத்த கார்களில் வந்த மாணவர்கள் அதைப்பார்த்து கதறி அழுதனர். அவர்களும், மக்களும் சேர்ந்து மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்டதால் உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிந்தது" என்றனர்.

இந்த மாணவர்களில் யாருக்காவது பிறந்தநாள் என்றாலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அறை எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுண்டு. அதுபோல ஒரு மாணவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களுக்கு துயரமாக முடிந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.