Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா?


பிறந்த குழந்தைக்கு வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா? குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன் பிறந்த குழந்தைக்கு கோலிக் பெயின் (Colic pain) அதாவது, வயிற்றுவலி வரும்  போதும், பொதுவாக மாலை நேரங்களிலும் குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை கிரைப் வாட்டர் கொடுப்பது நம்மூரில் வழக்கமாக இருக்கிறது. உண்மையில், அது நல்லதல்ல. ‘வயிறு உப்புசமாக இருக்கிறது, வயிற்றுவலியால் குழந்தை அழுகிறது’ என்று கிரைப் வாட்டர் கொடுப்பார்கள்.

ஆனால், கிரைப் வாட்டர் குழந்தையின் குடல் இயக்கத்தைக் கடினப்படுத்திவிடுவதால் குழந்தைக்கு மலம் கழிப்பது  கஷ்டமாகிவிடும். நாம் எதை நினைத்து கிரைப் வாட்டர் ஊற்றினோமோ, அதற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.  குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுத்தால் இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பு உண்டு.  அதனால் கிரைப் வாட்டரை தவிர்ப்பதே நல்லது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.