Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

#Election2016 - ஹிலரி கிளின்டனைத் தேர்ந்தெடுத்தது 12 பேர் கொண்ட அமெரிக்க டவுன்


அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தின் கீழ் வரும் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் 12 பேர்தான் உள்ளனர். எப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பை நள்ளிரவிலேயே நடத்தி முடிவை அறிவிக்கும் கிராமம் இது. இந்த முறை 12 பேரில் எட்டு பேர் வாக்களிக்க, நான்கு ஓட்டுகளுடன் ஹிலரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



எப்போதும் இக்கிராமத்தில் அதிக ஓட்டுகளைப் பெறுபவர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2000, 2004, 2008 தேர்தல்களில் அப்படித்தான் நடந்தது. இம்முறை ஹிலரி தேர்வாகியுள்ளார். நாளை காலை அமெரிக்காவின் முடிவு தெரியும்! 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.