Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

ஏ.டி.எம்-களில் ஏன் இவ்வளவு சீக்கிரம் பணம் காலியாகிறது தெரியுமா?


நவம்பர் 8-ம் தேதி இரவில் தொடங்கிய மக்களின் சங்கடங்கள் இன்னும் ஓயவில்லை. பணத்தை மாற்ற முயற்சிக்கும் மக்கள் வங்கிகளில் வரிசையில் காத்திருக்கிறார்கள். தள்ளுமுள்ளுகளும், நெரிசல்களும் தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் இப்போதைய காட்சியாக இருக்கிறது.

வங்கிகளில் மட்டுமல்ல ஏடிஎம்களிலும் இதே நிலைமைதான். பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து ஏடிஎம் இயந்திரத்தை நெருங்கும்போது பணமில்லாமல் போய்விடும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. பிறகு வேறு ஏடிஎம்க்கு போனால், அங்கு நீண்டவரிசை நமக்கு முன்பே இருக்கிறது. பல ஏடிஎம்கள் பணமில்லாததால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அன்றாட செலவுக்கும், வியாபாரத்துக்கும் தேவையான பணத்தை எடுக்க முடியாமல் பெரும்பாலானோரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நிலை?

இந்தியா முழுவதும் தற்போது இரண்டு லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்க நான்கு, நான்கு அறைகள் இருக்கும். ஒரு அறையில் 22 கட்டு ரூபாய் நோட்டுகளை வைக்கலாம். நான்கு அறைகளிலும் 1,000 ரூபாய் தாள்களை வைத்தால் ரூ. 88 லட்சம் வரை வைக்க முடியும். ஆனால் தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய 500, 2000 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போதுள்ள ஏடிஎம்கள், இந்தப் புதிய நோட்டுகளை வெளியிடுவதற்கு தேவையான அம்சங்களைக் கொண்டிராததால், அவை தற்போது வங்கிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏடிஎம்களில், 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைக்க முடியும் என்றால் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 8.8 லட்சம் தொகையை மட்டுமே நிரப்ப முடியும். ஒரு வங்கிக் கணக்கில் ஒருவர் ஒரு நாளைக்கு ஏடிஎம்-லிருந்து 2,500 ரூபாய் எடுக்கலாம் எனில் 352 பேர் மட்டுமே எடுக்க முடியும். ஒருநாளைக்கு ஒருமுறைதான் பணம் நிரப்பப்படுகிறது. சிலர் 3 அல்லது 4 கார்டுகள் மூலம் 2,500 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாயை வித்டிரா செய்கிறார்கள். ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருப்பதன் காரணமாகவே, மற்றவர்களுக்குப் பணம் இல்லாமல் போகும் நிலை உண்டாகிறது.

என்ன செய்ய வேண்டும்?

விரைவில் ஏடிஎம்களில் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும். ஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்றுமுறை பணம் நிரப்ப வகை செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான தொகையை எளிதாக எடுத்து தங்களது அத்தியாவசியத் தேவை மற்றும் வியாபாரத்தை சிக்கலில்லாமல் பூர்த்தி செய்ய முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.