'இப்போதைக்கு இதுதான் மொய்!' திருமண விழா சுவாரஸ்யங்கள்a500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண நிகழ்ச்சிகளில் 'ஸ்வைப் மிஷின்' மூலம் அன்பளிப்பு (மொய்) பெறும் நடைமுறை வந்துள்ளது. கரூரில் நடந்த திருமண விழாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த முறையை திருமண வீட்டினர் பின்பற்றி வருகின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். பணத்தேவையை சந்திக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இந்த மாதத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழா ஆகியவற்றை நடத்த ஏற்கனவே திட்டமிட்டவர்கள் பணத்துக்காக பரிதவித்து வருகின்றனர். கையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தாலும் அதை வைத்து எதுவுமே செய்ய முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
நண்பர்கள், உறவினர்கள் என படையைதிரட்டி ஒரு நபருக்கு 4,000 ரூபாய் விதம் எவ்வளவு முடியுமா அவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்களைப் மாற்றி ஓரளவு நிலைமையை சமாளித்து வருகின்றனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் திருமண மண்டபம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் திருமண வீட்டினர் சிரமப்படுகின்றனர். திருமண முடிந்த பிறகு இந்த தொகையை சிலர் கொஞ்சம், கொஞ்சமாக கொடுக்கின்றனர்.
அதோடு சுப நிகழ்ச்சிக்கு செல்லும் மக்களும் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அன்பளிப்பாக கொடுக்க தயங்குகின்றனர். இதனால் சிலர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்தும் வருகின்றனர். வேறுவழியின்றி பெரும்பாலானவர்கள் மொய் கவரில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்து கொடுத்தனர். அந்த தொகையையும் மாற்ற முடியாமல் திருமண வீட்டினர் தவிக்கின்றனர். சில இடங்களில் 500,1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்துவிட்டு, மீதி கேட்கும் நிகழ்வுகளும் அரேங்கேறி வருகிறது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மொய் பணம் கொடுக்க 'ஸ்வைப் மிஷின்' மூலம் மொய் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மணமகள் கார்த்திகா உறவினர் ராஜேஷ் கூறுகையில், "கோவை, கவுண்டபாளையத்தை சேர்ந்தவர் ரகுநாதனுக்கும், திண்டுக்கல் ஓட்டன்சத்திம் நார்னப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் கடந்த 10ம் தேதி கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் திருமணம் நடந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண செலவுக்கு என்ன செய்வது என்று திகைத்தோம். அனைத்து செலவுக்கும் அட்வான்ஸ் தொகையை கொடுத்துள்ளோம். இந்த சமயத்தில் செலவுக்காக வைத்திருந்த பணம் அனைத்தும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள். கையில் தேவையான பணம் இருந்தும் அதை செலவழிக்க முடியவில்லை.
எங்களின் நிலைமையை புரிந்து கொண்டவர்கள், திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி கொடுத்து வருகிறோம். திருமணத்துக்கு வருபவர்கள் அன்பளிப்பு கொடுப்பதில் சிக்கல் நேரிடும் என்று கருதியதால், இரண்டு ஸ்வைப் மிஷின்களுக்கு ஏற்பாடு செய்தோம். அதில் திருமணத்துக்கு வந்தவர்கள் தங்களின் அன்பளிப்பு தொகையை தெரிவித்து கார்டை தேய்த்து விட்டு சென்றனர். அதற்கான ரசீதையும் மொய் கொடுத்தவர்களிடம் வழங்கினோம். கார்டு இல்லாதவர்கள் வழக்கம் போல கவரில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தனர். அதை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்வது புத்திசாலித்தனம்"என்றார்.
கரூரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சில திருமண விழாவில் மொய் கொடுக்க ஸ்வைப் மிஷின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.