இந்தியா முழுவதும் மோடியின் அறிவிப்பால் முடங்கிக் கிடக்கிறது ஹவாலா பணம். தங்களிடம் இருக்கும் பணம் இனி பயன்தருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் மாற்று ஏற்பாட்டுக்குத் தயாராகி வருகின்றனர் ஹவாலா புள்ளிகள்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணத்தை பரிவர்த்தனை செய்ய ஆயிரம் வசதிகள் இருக்கின்றன. ஆனாலும் குறைந்த செலவில் அதிகத் தொகையை எந்தச் சட்ட சிக்கலும் இல்லாமல் கொண்டுவருவதற்கு என்றே தனி நெட்வொர்க் செயல்படுகிறது. இதற்குப் பெயர்தான் ஹவாலா. பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடிகள் இந்த வியாபாரத்தில் புழங்கி வருகின்றன. இந்தியாவில், ஹவாலா பணப் பரிவர்த்தனையின் தலைமையிடமாக உள்ளது மும்பை. அங்கிருக்கும் நிழல் உலக தாதாக்களின் முக்கிய தொழிலில் ஹவாலாவும் உண்டு. தமிழகத்திலும் இந்த பிஸினஸ் சக்கை போடு போட்டுவருகிறது.
சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலி்ல் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தினந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள். இவர்களுக்குத் தேவையானப் பணத்தை கறுப்புப் பணமாக வைத்திருப்பவர்கள் குறைந்த கமிஷனில் வேண்டிய தொகையை ரொக்கமாக அளித்துவருகின்றார்கள். இந்த நிலையில் செவ்வாய் இரவு தீடீர் என மோடி அறிவிப்பு வந்தவுடன் இவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.
500, 1000 ரூபாய் கட்டுகளாக பல லட்சங்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் குழம்பி உள்ளார்கள். கணக்கில் வராத பணம் என்பதால் வங்கியில் கொடுத்தும் மாற்ற முடியாத நிலையில் இந்தப் பண பரிவர்த்தனை முற்றிலும் தடைபட்டுவிட்டது. உ.பி-யில் ஹவாலா பணம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. அதே போல் மும்பையிலும் ஹவாலா வர்த்தகர் ஒருவர் தன்னிடம் இருந்த பல கோடி ரூபாய் பணத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
ஹவாலா பணத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நபர்களிடம் பணம் மாற்றும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். ஹவாலா புள்ளிகளிடம் “உங்களிடம் உள்ள பணத்தை நாங்கள் மாற்றித் தருகிறோம். ஒரு வாரத்தில் புதிய நோட்டுகளாக எங்களால் மாற்றித் தரமுடியும். ஆனால் லட்ச ரூபாய்க்கு இருபதாயிரம் ரூபாய் கமிஷனாக வேண்டும்” என்று கூறி இப்போது பணக்கட்டுகளை பெற்றுவருகின்றனர். இதை தவிற பணத்தை தங்கமாக சிலர் மாற்றும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை அன்று சென்னையின் ஹவாலா கேந்தர பகுதி என்று கருதபடும் பாரிஸ்கார்னர், சவுக்கார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி கட்டுகட்டாக தடைசெய்யபட்ட நோட்டுகளை கைபற்றியுள்ளார்கள்.
வங்கிகளில் சாமானிய மக்கள் நான்காயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடிகிறது. இந்த நிலையில், லட்சக்கணக்கில் மாற்ற ஆவணங்கள் வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, கமிஷனை வாங்கிக் கொண்டு எப்படி பல கோடிரூபாய் பணத்தை மாற்றிதரமுடியும்? பெரும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து, அவர்கள் மூலம் பணத்தை மாற்றம் செய்து வருவதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் சில வங்கிகளில் மொத்தமாக புதிய நோட்டுகளை சிலர் கைமாற்றி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.