Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

கணவன் மனைவி போல் வாழ்ந்தோம்..! என்னை ஏமாற்றிவிட்டான்..! பெண்ணின் பரபரப்பு புகார்..!!


 
அமெரிக்காவில் தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் இளைஞர் மீது உடுமலை காவல்துறையில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்தவர் சுகாசினி ( 29). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞரும் 2010–ம் ஆண்டு முதல் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் , தற்போது அந்த இளைஞர் மீது சுகாசினி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுகாசினி ” நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரே வீட்டில் கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நான் கடந்த 10–ந்தேதி காலை இந்தியா வந்தேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த அவர் மீதும் அவருக்கு உதவியாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இது குறித்து சுகாசினி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அதனை தொடர்ந்து புகார் கொடுத்த சுகாசினியிடமும், அந்த இளைஞரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.