November 8, 2016
மதுக்கடைகளை மூட கோரி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
மதுரை புதூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தந்தை ஆனந்துடன் சேர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் திருப்பரங்குன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென போலீசாரிடம் மனு செய்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் முன்பு ரெயில்வே பாலத்தின்கீழ் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இன்று மதியம் 12 மணியளவில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை ஆனந்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றத்தில் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருநகர் போலீசார் விரைந்து வந்து அனுமதி இன்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக நந்தினி, ஆனந்தை கைது செய்தனர்.
மதுக்கடைகளை மூட கோரி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.