November 30, 2016
ரேஷன் கடையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி - சேலத்தில் பரபரப்பு
ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்ற அதிநவீன கருவி பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக சேலத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்களின் அளவு இந்த கருவியில் பதிவு செய்யப்பட்டு பயனாளர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்த கருவி அறிமுகப்படுத்தப்பட்டாலும், வாங்காத பொருட்களுக்கும் குறுஞ்செய்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் சேலம் அன்னதானப்பட்டி நடேசன் நகரில் உள்ள ரேஷன் கடையில் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ரேஷன் கடையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி - சேலத்தில் பரபரப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.