Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

சிறை கைதி தப்பி ஓட்டம் சிறை காப்பாளர் இடைநீக்கம்





திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியதை தொடர்ந்து சிறைத்துறை எஸ்பி சிறை காப்பாளரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பண்ணணக்குளத்தை சேர்ந்தவர் சந்திரன்(46). இவர் கடந்த 2002ம் ஆண்டு  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன்பின் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து 2004ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 21ம் தேதியன்று சந்திரன் சிறையிலிருந்து காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை எஸ்.பி நிக்கிலா ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.   அப்போது பணியில் இருந்த சிறை வார்டன் ராம்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள கைதி சந்திரனை  தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.