Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

அரவிந்த் கெஜ்ரிவாலின் அனல் பறக்கும் பொதுக்கூட்ட உரை - தமிழாக்கம்.


திரு அரவிந்த் கெஜ்ரிவால், 17 நவம்பர் 2016 அன்று, டில்லி ஆசாத்பூர் மண்டி ஜனசபையில், பொது கூட்டத்தில் பேசியதின் சுருக்கமான தமிழாக்கம்.

பிரதமருக்கும் எங்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்து, உள்ளது. ஆனால் அவர் உன்னதமான எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும், முதலில் ஆதரவு தெரிவித்து நாங்கள் உடன்பட்டோம். சொச்ச பாரத் எனும் பாரதத்தை சுத்தப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டதும், நாங்கள் தொடைப்பங்களுடன் தெருவில் இறங்கினோம்.
அதே போன்று, யோகா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றதும், நாங்கள் முழு மனதுடன் அதற்காக பிரச்சாரம் செய்தோம்.
பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தபோது, நான் பெரிய சல்யூட் என்று பெருமையுடன் கூறினேன். அதை திரித்து குழப்பி, பலர், பல ஊடகங்கள் வேறுவிதமாக பிரச்சாரம் செய்தது வேதனைக்குரியது.

ஊழலை, கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் செல்லாது என்று கூறிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியது என்ன கணக்கு என்று பொருளாதார விஞ்ஞானிகளால் கூட கூற முடியவில்லை.

லஞ்சம் கொடுப்பதற்கும், கருப்பு பணமாக பதுக்குவதற்கும் 2000 ரூபாயாக வசதிபடுத்தி கொடுத்துவிட்டு கருப்பு பணம் ஒழியும் என்பது, வருமானவரி துறையில் கமிஷனராக இருந்த என் அறிவுக்கு புலப்படாத விஷயம்.

நோட்டுகளை புதுப்பித்து, ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிக்க போவதாக, தேசத்தின் மிக பெரிய ஊழல் திட்டமிடப்பட்டிருக்கிறது, மக்களே, நான் சொல்லும் விசயத்தை அனைவருடன் பகிருங்கள்.
வங்கிகள் மிக பெரும் பணமுதலைகளுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்வரை கடன் கொடுத்துள்ளது. RBIயின், CAGயின் அறிக்கைபடி, இந்த 8 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் என வங்கிகள் அறிவித்திருக்கிறது. மோதி அவர்கள், இந்த 8 லட்சம் கோடி கடனில் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துவிட்டார்.
நீங்கள் விஜய் மல்லையாவை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இவரது தொழில் சாராயம் காய்ச்சுவது. அவருக்கு நிறைய வயதாகிவிட்டது, ஆனால் சிறு வயது பெண்களுடன் உலகம் சுற்றி கொண்டிருக்கிறார். அவர்மீது 8000 கோடி ரூபாய் கடன் உள்ளது. யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக அவரை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அச்சமயம், பத்திரிக்கைகளுக்கு, ஊடகங்களுக்கு கூட தெரியாது.

இந்த 8 லட்சம் கோடி கடனில் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தாகிவிட்டது. இனி மீதம் உள்ள கோடிகளை தள்ளுபடி செய்ய மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டது தான், இந்த 500, 1000 ரூபாய் செல்லாதாக்கும் திட்டம்.
சில ஆயிரம் கோடிகள் மக்களின் பணம் வங்கியில் சேர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முன்றைய நாள் ஸ்டேட் பேங்க் 8000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. இதை உறுதியான ஆதாரத்துடன் கூறமுடியும்.
நீங்கள் இரவும் பகலும் மழையிலும், வெய்யிலிலும் கால் கடுக்க நின்று நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை செலுத்தி, மாற்றி கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு என்ன பலன் என்பது உறுதியில்லை, ஆனால், பெருமுதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி ஆகும்.

மோதி அவர்கள் இந்த கடன் தள்ளுபடியை, தன் நண்பர்களுக்காக செயகிறார் என்று பலர் கூறுகிறார்கள். உடன் பிறந்தவர்களுக்கே எதுவும் செய்யாதபோது, இவர்களின் நட்பு என்ன அவ்வளவு இருக்கமானதா? சுயநலமற்றதா? எதற்காக இந்த நட்பு அர்ப்பணிப்பு? காரணம் இருக்கிறது, மக்களே!

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், விவாதங்கள் இருந்த போதிலும், மோதி அவர்களை நேர்மையானவர், தூய்மையானவர் என்று இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன்.

அனால் இரு நாட்களுக்கு முன்பு எனக்கு வந்த தஸ்தாவேஜுகளை படித்தவுடன், பிரமித்துவிட்டேன். அதிர்ச்சிக்குள்ளானேன். நம்ப முடியாத இந்த விவரத்தை வருமான வரித்துறையின் அலுவலகத்தில் இருந்து வந்த காகிதங்கள் வெளிப்படுத்தியது. எனக்கு வருமான வரித்துறையின், பைனான்ஸ் மினிஸ்டரியில் முதன்மை உயரதிகாரி, நான் வருமானவரி துறையில் கமிஷனராக இருந்த காலத்தில் இருந்தே நண்பர், இந்த காகிதங்களை அனுப்பி இருக்கிறார்.

அந்த ஆவணங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
பிட்லா நிறுவனத்தை பற்றி தெரியுமா, உங்களுக்கு?
15 அக்டோபர் 2013 அன்று, இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கணினிகளில் இருந்து உருவப்பட்ட விவரங்களில் கண்டெடுக்கப்பட்ட விபரம் இது.
"குஜராத் முதலமைச்சர் - 25 கோடி. 13 கோடி கொடுக்க பட்டுவிட்டது. மீதம் 12 கோடிதரவேண்டி உள்ளது." இதற்கு என்ன அர்த்தம். அவருக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? நடக்கவில்லை, காரணம், அவர் முதலமைச்சராக இருந்தார்.

நேற்று சில செய்திதாள்களில் 22 நவம்பர் 2014 அன்று சகாரா நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர் என வெளியாகியது. இந்த நிறுவனத்தின் ஒரு அறையில் 130 கோடி கைப்பற்றப்பட்டது. அதே இடத்தில வருமான வரித்துறை கமிஷனரின் கையெழுத்தும் முத்திரையும் இருந்த சில ஆவணங்கள் கிடைத்தது. ( அனைவருக்கு காட்டுகிறார்) அதில் -
30 அக்டோபர் 2013 அன்று 2.5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
12 நவம்பர் 2013 அன்று 5.1 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
27 நவம்பர் 2013 அன்று 2 .5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
29 நவம்பர் 2013 அன்று 5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் சச்சின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
6 டிசம்பர் 2013 அன்று 5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் சச்சின் என்பவரின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ 40 கோடி மோதி அவர்களுக்கு கொடுக்க பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளது, உண்மையா இல்லையா என்று இவைகளை ஆய்வு செய்யவேண்டுமா, வேண்டாமா?

இன்று எங்களை வரிசையில் நிற்க வைத்திருக்கிறீர்களே, அதானி அம்பானி போன்றவர்களின் நிறுவனம், இல்லங்களில் கருப்பு பணம் சோதனை செய்தீர்களா?
சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்தீர்களா?

மனதில் சந்தேகம் எழுகிறது. இந்த பணம் கொழுத்தவர்களின் நலனுக்காக நம்மிடம் பணம் பிடுங்க படுகிறதா, அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு சதி நடக்கிறதா, அதற்காக கோடிகள் கைமாறியதா என சந்தேகம் எழுகிறது.
துரோகம் இழைக்கப்படுகிறது, இந்த நாட்டுக்கு துரோகம் செய்யப்படுகிறது.

முன்றைய தினம் பிஜேபியின் நெருங்கிய நண்பர் ஜனார்த்தன ரெட்டியின் குடும்ப திருமணத்திற்கு 500 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டதே, அவருக்கு மட்டும் பணம் எப்படி கைக்கு வந்தது? அவருக்கு அவ்வளவு இரண்டாயிரம் நோட்டுகளை யார் கொடுத்தது? அவர் என்ன வரிசையில் நின்றா பணம் பெற்றார்?

2.5 லட்சத்திற்கு மேல் பணம் வைப்பு செய்தால் வரி விதிக்கப்படும் என மிரட்டுகிறீர்களே. மகள்கள் திருமணத்திற்கு 2.5 லட்சத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆணை இடுகிறீர்களே!
இன்றைய காலகட்டத்தில் 2.5 லட்சத்திற்கு திருமணம் முடிக்க முடியுமா? சில தினங்களுக்கு முன்பு அருண் ஜெட்லீ தன் மகளுக்கு திருமணம் முடித்தார், அவரென்ன 2.5 லட்சத்தில் திருமணம் முடித்தாரா? நீங்கள் உங்கள் மகளின் திருமணத்தை 2.5 லட்சத்திற்குள் முடித்து காட்டுங்கள், பார்ப்போம்?

வரிசையில் நின்று பணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெற்று கொள்ளுங்கள் என்று எங்களை முட்டாளாக்க பார்க்கிறீர்களா ? எங்களை வரிசையில் கையேந்த வைத்துவிட்டு நீங்கள் இந்த கருப்பு பண திருடர்களுடன் கொஞ்சி குலாவுவீர்களா?

இது நடக்கா கூடாது, நடக்க விடமாட்டோம்.
52 பேர் இதுவரை பணம் கைக்கு வராத காரணத்தினால் உயிர் இழந்து இருக்கிறார்கள், இதற்கு யார் பொறுப்பு?

மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்,
மூன்று நாட்களுக்குள் இதை திரும்ப பெறுங்கள், இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும்...

ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.