Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

பிரிந்துவிடலாம் என கூறிய காதலி..! காதலன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா..?!




சுவிட்சர்லாந்து நாட்டின், பேர்ன் நகரில் ஒரு காதல் ஜோடி வசித்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் காதலை முறித்துக்கொள்வதாக காதலி கூறியுள்ளார்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன், தனது காதலியை தீர்த்துக் கட்ட முடிவு கட்டினார்.
இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு பேருந்துநிலையத்திற்கு  காதலியை வரவழைத்தார்.  சில நிமிடங்களில் காதலி ஒரு பெண்ணுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்போது, திடீரென  காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியை குத்த முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தோழி காதலனை தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தோழி அங்கிருந்து தப்பி ஓடியதும், தனது காதலியை விரட்டிச் சென்ற காதலன் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேர்ன் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.












R

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.