November 15, 2016
கருப்பு பணம் வைத்திருப்போர் பாதிக்கப்படவில்லை சாமானிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிரனாயி விஜயன்
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30–ந் தேதி வரை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். கருப்பு பணம் வைத்திருப்போர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சாமானிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்திலும், மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் பிரதமர் மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்தார். பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு உடனடியாக அவர் ஜப்பானுக்கு சென்றுவிட்டது கண்டனத்துக்கு உரியது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் சொல்ல முடியாத வேதனையில் உள்ளனர். இதுவரை எதுவும் சரியாகவில்லை. எந்த அரசும் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டது இல்லை.
கருப்பு பணம் வைத்திருப்போர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சாமானிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மத்திய அரசுக்கு நெருக்கமான சிலர் அதிகபட்ச மதிப்பு கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கப்போவதை முன்கூட்டிய அறிந்து வைத்துள்ளனர். இதனால் உஷாராகி அவர்கள் பணத்தை மாற்றி விட்டனர்.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக அது தொடர்பாக எழும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து இருக்கவேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையை சமாளிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 30–ந் தேதி வரை பழைய ரு.500, ரூ.1,000 நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு பணம் வைத்திருப்போர் பாதிக்கப்படவில்லை சாமானிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிரனாயி விஜயன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.