Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 24, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்



பணப்புழக்கமின்மையால் மீன் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளதை அடுத்து, நாளை மறுநாள் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் பணப் புழக்கம் குறைந்துள்ளது. பணப் புழக்கமின்மையால் மீன் வியாபாரம் சரிவைச் சந்தித்துள்ளதால், மீனவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே நிலைமையை சீரமைப்பது தொடர்பாக ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தில் மீன்துறை இணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசு அதிகாரிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பணப் பரிவர்த்தனை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததாலும், பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவது இன்றுடன் நிறுத்தப்படுவதாலும், வரும் 26 -ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.