Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை



பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  ஐதராபாத் வந்தார். அவருடைய பாதுகாப்பு பணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான போலீசார் ஐதராபாத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி ஆசிபாபாத் மாவட்டத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரீதர் என்பவரும் ஐதராபாத் வந்திருந்தார்.  அவர் ஐதராபாத் அருகே உள்ள அப்பரப்பள்ளி பகுதியில் பணியில் இருந்தார். அப்போது திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக ஸ்ரீதர் தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.