Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய சரிவு



தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் உச்சத்தை பெற்றது.

ஆனால், தங்கம் வாங்க பெரும்பாலான மக்கள் இன்று ஆர்வம் காட்டாததால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. சென்னையில் காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 49 ரூபாய் விலை குறைந்து 3,011 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் விலை சரிந்து 24,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் முதலீட்டுத் தங்கம் ஒரு கிராம் 53 ரூபாய் விலை இறங்கி 3,113 ரூபாயாக இருக்கிறது.



ஒரு கிராம் வெள்ளி 30 காசு விலை குறைந்து 47 ரூபாய் 40 காசுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 230 ரூபாய் விலை இறக்கம் கண்டு 44, 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படு‌கிறது.

1 comment:

  1. இது தான் மிக பெரிய சரிவா..?அட போங்க ப்பா

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.