Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

அ.தி.மு.க., தி.மு.க. ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது ஐகோர்ட்டு நீதிபதி என்.க



ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பாதிப்பு
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள், கையில் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.500 வந்து விட்டது
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழகத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வந்து விட்டது. அது எவ்வளவு தொகை? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அதற்கான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்கிறேன்’ என்று கூறி அந்த அறிக்கையை நீதிபதியிடம் கொடுத்தார். அதை நீதிபதி படித்து பார்த்தார்.
மகிழ்ச்சி அளிக்கிறது
பின்னர் ரிசர்வ் வங்கி வக்கீல், ‘தற்போது வந்துள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி, ‘தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்று சேர்ந்தார்களோ இல்லையோ? இப்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சினையில் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது, உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், தற்போது மக்கள் படும் கஷ்டத்துக்காக இந்த போராட்டம் என்றால் அதை வரவேற்கவேண்டும். அந்த போராட்டத்திலும் உள்நோக்கம் ஏதாவது இருந்தால் அது உண்மையில் வேதனைக்குரியது’ என்று கூறினார்.

பிரச்சினை தீர்ந்து விடும்
பின்னர், ‘புதிதாக வந்துள்ள ரூ.500 நோட்டுகள் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு மட்டும் அதிகம் செல்வதாக குற்றச்சாட்டு எழுகிறதே?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு வக்கீல், ‘அது நாட்டில் மிகப்பெரிய வங்கி என்பதால், கூடுதலாக சென்று இருக்கலாம். மற்றப்படி அனைத்து வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘ரூ.500 புதிய நோட்டுகள் தாராளமாக புழக்கத்துக்கு வந்து விட்டாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்வு ஏற்பட்டு விடும்’ என்று கூறி விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.