November 5, 2016
புழல் சிறையில் உணவுடன் குண்டூசிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற கைதி
ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்ற அப்புராஜா (38). 2011-ல் எழும்பூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிக்கி ஆயுள் கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சக கைதிகளுடன் உணவருந்தி கொண்டு இருந்தபோது திடீரென தயாராக வைத்திருந்த குண்டூசிகளை உணவுடன் கலந்து சாப்பிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அப்புராஜா மயங்கி கிடந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை மீட்ட சிறைத்துறை அதிகாரிகள் முதல் உதவி அளித்து விட்டு, மேல் சிகிச் சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கைதிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்துள்ளன. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சுவாதி கொலை யில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். அதே பாணியில் டில்லிராஜா என்ற கைதியும் தற் கொலைக்கு முயன்றார். தற்போது மேலும் ஒரு சிறை கைதி குண்டூசி களை உணவுடன் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புழல் சிறையில் உணவுடன் குண்டூசிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற கைதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.