Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 17, 2016

ரூபாய் மாற்று நடவடிக்கை: பாஜக எம்.எல்.ஏ பகீர் தகவல்



நாட்டையே புரட்டிப்போட்டுள்ள ரூபாய் நோட்டு விவகாரத்தில், மக்களை மேலும் விரக்தியில் ஆழ்த்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 9ம் தேதி முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அன்று முதல் இன்று வரை சுமார் 9 நாட்களாக மக்கள் தங்களது பணத்தை வங்கியில் மாற்ற அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கை ஏழை மக்களுக்கு தான் பெரும் சோதனை என்று விமர்சித்து வரும் வேலையில், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "ரூபாய் மாற்று நடவடிக்கை அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்" என்ற பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார். மேலும் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் தரம் "கள்ள நோட்டு" போன்று உள்ளதாக  அவர் கூறியது வீடியோப் பதிவில் உள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து எம்.எல்.ஏ பவானி சிங் மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார், "நான் ஒருபோதும் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை, அந்த வீடியோ செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டிக்கு பின் சில பத்திரிக்கையாளருடன் பேசி கொண்டிருந்தததை திரித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.