November 12, 2016
கோமாதாவா? மதுமாதாவா? பசு மூத்திரத்தை வியாபாரப் பொருளாக்கும் வி.எச்.பி.
அகமதாபாத், நவ.11 2017 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி பாஜக ஆளும்குஜராத் மாநிலத்தில் மது விலக்கு நடைமுறையில் இல்லாமல் சாராயம் ஆறாக பெருக் கெடுத்து ஓடுவதாகக்கூறப்படும் குற்றச் சாட்டையொட்டி, விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் பசு மாட்டிலிருந்து மதுவுக்கு மாற்றாக மருந்து என்று குறிப்பிட்டு, அருந்தக்கூடிய பானமாக கோ ஆல்காக்ஸ் என்னும் பெயரில் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது.
Ôகோ ஆல்காக்ஸ்Õ
விசுவ இந்து பரிஷத் அமைப்பு கோ ஆல்காக்ஸ் (‘நிஷீ-கிறீநீஷீஜ்’) என் கிற பெயரில், மதுவுக்கு மாற்றாக பசு மாட்டிலிருந்து மருந்தை தயாரித்து வணிகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
பசு மாட்டிலிருந்து தயாரிக்கப்படு கின்ற பொருளாக குறிப்பிட்டு 200 மில்லி. ரூபாய் 800 என்ற விலையில் விசுவ இந்து பரிஷத் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது.
குஜராத்தில் 1960ஆம் ஆண்டிலிருந்து மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமம், நகரம் என்கிற பேதமில் லாமல் மது எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. ஒன்றரை மாதங்களுக் கும் மேலாக விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பெருமுயற்சி எடுத்து, பசு மாட்டிலிருந்து தயாரிக்கப் படும் பானமாக, மருந்தாக 500 பேருக்கு கொடுத்து, நல்ல மருந்தாக உள்ளதாக கூறியுள்ளார்களாம்.
குஜராத் மாநிலத்தில் பசுவிலிருந்து தயாரிக்கப்படும்பொருள்களைவணி கப்படுத்திவருபவரான திருகபாரியா கூறும்போது,
கடந்த ஒன்றரை மாதமாக விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலகங்களில் மதுவுக்கு மாற்றாக உள்ள இந்த மருந்து, காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒவ்வொரு அலுவலகத்திலும் 5 முதல் 6 புட்டிகள் ஒரு மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பன்னாட்டு செயல் தலைவர் டாக்டர் பிரவீன் தொகாடியா இந்த புட்டிகளை இலவசமாகவே வழங்கிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார் என்று திருக பாரியா கூறினார்.
அகமதாபாத்பகுதியைச்சேர்ந்தவ ரான விசுவ இந்து பரிஷத் அமைப் பின்பொதுச்செயலாளர்ரச்சோட் பார்வாட் கூறும்போது,
“பசுவின் பொருள்களை விற்பனை செய்வதன்மூலமாக சிறிய அளவில் உள்ள கோசாலைகள் பொருளாதார ரீதியில் வளமாகியுள்ளன. பசுவின் மூத்திரம் மற்றும் பால் ஆகியவற்றை கோசாலைகளிலிருந்து பெறுகிறோம். ஆசிரமங்களிலிருந்து மூலிகைகளைப் பெறுகிறோம். அவற்றிலிருந்து மருந்துப் பொருள்கள், அலங்காரப் பொருள்களை தயாரிக்கிறோம்’’ என்றார்.
பசுப் பாதுகாப்பு என்று கூறி Ôகோபாஷ்டமிÕ கொண்டாடும்
விசுவ இந்து பரிஷத்
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வழிபடுவதற்காகÔகோபாஷ்டமிÕகொண் டாடப்படுகிறது-. கோபாஷ்டமியின்போது பசுவைக் கொல்வதைத் தடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள¢கிறார்கள்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் கோபால் சர்மா கூறும்போது, “எந்தக்காரணத்தைக்கொண்டும்பசு மாடுகளைக் கொல்லக்கூடாது என் பதை உறுதி செய்து, பசு மாட்டைக் கொல்வதைக் கண்காணிப்போம் என்று நாங்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். பசுமாட்டைத் தொட்டுவழிபடுவதன்மூலம்அனைத்து நோய்களையும் போக்க முடியும். கோபாஷ்டமியின்போது கோசாலை களுக்கு விசுவ இந்து பரிஷத் அமைப் பினர் சென்று பசுக்களுக்கு சிறப்பு தீவனத்தை அளிப்பார்கள்’’ என்றார்.
மேலும் சர்மா கூறும்போது,
“பொருளாதாரத்தில் விவசாயத்தை சார்ந்துள்ளநாட்டில்வாழ்கிறோம்என் பதைநாம் நினைவில் கொள்ள வேண் டும்.அதில்பசுக்கள்பங்குஅதிக மானது. பசுவின் மூத்திரம் மற்றும் பால்மருத்துவத்தன்மையைக்கொண் டுள்ளன. அவை ஆயுர்வேத மருத்துவத் தில்கூட பயன்படுகின்றன’’ என்றார்.
கோமாதாவா? மதுமாதாவா? பசு மூத்திரத்தை வியாபாரப் பொருளாக்கும் வி.எச்.பி.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.