November 11, 2016
யாழில் தொடரும் கைதுகளால் அச்சத்தில் இளைஞர்கள்!
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்.
யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது, வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஆறு பேர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆவா குழு என்ற பெயரில் தமிழின செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறி வைத்து கைது நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழில் தொடரும் கைதுகளால் அச்சத்தில் இளைஞர்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.