Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரிய விவகாரம் கடந்து வந்த பாதை..!




சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் கடந்துவந்த பாதை.

கடந்த 1,500 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது. இவர்கள் பம்பை என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிடுவர்.

கடந்த 1991-ம் ஆண்டு, 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய கேரள உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது.

2006-ம் ஆண்டு ஜோசியர் உன்னிகிருஷ்ண பனிக்கர் சபரிமலையில் நடத்திய 4 நாள் பூஜையில் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தது தெரியவந்ததாக அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் எழுப்பியது.

2007-ம் ஆண்டில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்கலாம் என அப்போதைய இடதுசாரி அரசு கூறியது.

2010-ல் நடிகை ஜெயமாலா அளித்த பேட்டியில், 1989-ம் ஆண்டு சபரிமலை கோவிலுக்கு சென்றபோது ஐயப்பன் விக்ரகத்தை வணங்கியதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பான பொதுநலமனு விசாரணையின்போது, கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரி மலை தலைமை தந்திரி, உள்ளிட்டோருக்கு, 2010 ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

2011-ம் ஆண்டு டிசம்பரில் மத உணர்வுகளை மீறியதற்காக நடிகை ஜெயமாலா, ஜோசியர் உன்னிகிருஷ்ண பனிக்கருக்கு கேரள உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு உள்ள தடை நீடிக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கருத்து தெரிவித்தது.

அதே மாதத்தில் இது தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு தலையிடாது என அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க ஆட்சேபனை இல்லை என கேரள அரசு உச்ச நீதிமன்றமத்தில் தற்போது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.