November 16, 2016
திருமணத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியார்: மணமகன் அத்தை பலி
திருமணத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியாரால் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியான சம்பவம் சண்டிகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் கர்னல் நகரில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாகூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
திருமண நிகழ்வில் மணமகனின் உறவினர்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் சாமியார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தினார். இந்த துப்பாக்கி சுடும் கொண்டாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் இணைந்து
கொண்டனர்.
ஆனால் துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் மீது பட்டதில் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதைக் கண்ட அந்த பெண் சாமியார் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய பெண் சாமியார் மீது கர்னல் போலீசார் கொலை முயற்சி, ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியார்: மணமகன் அத்தை பலி
Reviewed by மறத்தமிழன்
on
November 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.