Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

போலீஸ் உயரதிகாரிகள் செக்ஸ் தொல்லை: பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!


காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆண் போலீஸ்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு தருவது ஆங்காங்கே நடைபெறுகிறது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணி புரியும் பெண் ஒருவர் உயரதிகாரிகளின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வரும் 27 வயதான பெண் இந்துமதி சென்னை எழும்பூர் நரியங்காடு குடியிருப்பில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்திருக்கிறார்.

மயங்கிய நிலையில் இருந்த இந்துமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட இந்துமதியிடம் நடத்திய விசாரணையில் தான் அழகாக இருப்பதால் உயரதிகாரிகள் பலர் தனக்கு தொல்லை தருவதாக கூறினார்.

மேலும், இதனால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. பெரிய பிரச்சனை எதுவும் இதனால் ஏற்படும் முன்னர் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவே தற்கொலை முடிவை எடுத்ததாக கூறினார். இதனையடுத்து இந்துமதி மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.