Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

மஹிந்தவின் மகன் ஏவிய செய்மதி எங்கே? - கண்டுபிடிக்க இன்னொரு செய்மதி



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் றோகித ராஜபக்சவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போய்விட்டது அந்த செய்மதியைக் கண்டுபிடிப்பதற்கு, இன்னுமொரு செய்மதியை அனுப்புங்கள் என்று ஜே.வி.பி எம்.பி நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கேள்வி எழுப்பியபோதே நளிந்த எம்.பி மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.

பண்டங்களை ஏற்றி இறக்கும் நிறுவனமான சுப்ரீம் செட் தனியார் நிறுவனம், செய்மதியை அனுப்பும் தகுதியை எவ்வாறு பெற்றது? – என நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டிருந்தார்.

அக்கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தெரியாது என்று எடுத்து எடுப்பிலேயே கூறிவிட்டார். இதனால் அவையிலிருந்தவர்கள் எல்லோரும் கெக்கென்று சிரித்துவிட்டனர். அப்படியானால், மஹிந்த ஆட்சியில் விண்ணுக்கு ஏவப்பட்டு காணாமல்போன அந்தச் செய்மதியைக் கண்டுபிடிக்க இன்னுமொரு செய்மதியை அரசாங்கம் அனுப்ப வேண்டும் என்றும் நளின் எம்.பி கோரிக்கை விடுத்தார். அப்போதும் கெக்கென்று சிரித்துவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.