November 14, 2016
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவு குறித்து ஜனாதிபதியுடன் மம்தா பானர்ஜி பேச்சு
பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த அறிவிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பேசினார் அப்போது அவர் வருகிற16 மற்றும் 17 ம்தேதிகளில் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார் என மம்தா கூறினார்.
நாட்டில் உள்ள கறுப்பு பணம் , கள்ள நோட்டு, வரி ஏய்ப்பு ஆகியவற்றை அடியோடு ஒழிக்க பழைய ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் பழைய இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக தற்போது நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் விடுமுறை நாட்களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கும் பணி நடக்கிறது. அங்கு பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நேற்று பேசினார். அப்போது ,இது குறித்து எதிர் கட்சி பிரதிநிதிகளுடன் வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் சந்திப்பு நடத்த தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார் என மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவு குறித்து ஜனாதிபதியுடன் மம்தா பானர்ஜி பேச்சு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.