November 12, 2016
இனிமேல் தங்கம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கணக்கு காண்பிக்கணும்..!? மோடி அரசின் அடுத்த அதிரடி..!!
கடந்த 8-ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு வெளியானதும் கணக்கில் வராத கருப்பு பணத்தை இருப்பு வைத்திருந்த பலரும் அந்த பணத்தை தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருக்கும் பிரபல தங்க வர்த்தகர்கள் ஒரு கிலோ தங்கத்திற்கு விற்பனை விலையை விட 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அதிக லாபம் வைத்து விற்றதாக தகவல் பரவியது.
இதனால், சென்னை, மும்பை போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான நகை கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதியில் இருந்து கடந்த 4 தினங்களாக தாங்கள் கொள்முதல் செய்த தங்கத்தின் அளவு, விற்பனை செய்த தங்கம் தொடர்பான கணக்கு மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு நாட்டில் உள்ள முக்கிய நகை வியாபாரிகளுக்கு மத்திய கலால் புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் கடந்த 4 தினங்களாக கையாண்ட தங்கத்தின் அளவு குறித்து கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மத்திய கலால் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதே போல வியாபாரிகள் இனிமேல் கொள்முதல் செய்யும் தங்கத்தின் அளவு மற்றும் விற்பனை போன்றவற்றை சரியாக கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது..?!
இனிமேல் தங்கம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கணக்கு காண்பிக்கணும்..!? மோடி அரசின் அடுத்த அதிரடி..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.