Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 22, 2016

முதலாளி மனைவிக்காக…காதல் மனைவியை….ஓ மை காட்…?!



முதலாளி மனைவிக்காக, அவர் மீது  கொண்ட காதலுக்காக,  கேவலமான அற்ப சுகத்திற்காக தான் காதலித்து திருமணம் செய்த மனைவியை கொன்றார் ஒருவர்..! கொடுமை…!கொடுமை..!
காதல் மனைவியை கொன்று, வீட்டிலேயே புதைத்த கொடூர கணவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரகப்பள்ளியைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார்.
ஆனால் தான் வேலை பார்த்த இடத்தில முதலாளி மனைவிக்கும் அணில் குமாருக்கும் கள்ள உறவு  இருந்திருகிறது. பல இரவுகள் அணில் வீட்டிற்கே வருவதில்லையாம்.
முதலாளி வீட்டில் தங்கி விடுவார் என்கிறார்கள்.ஒரு நாள் குடி போதையில் மனைவியிடம் உளறிவிட்டார் அணில்.
அதிலில் இருந்தே இருவருக்கும் சண்டை வந்திருகிறது…! ஒரு நாள் திரிவேணி முதலாளி வீட்டிற்கே சென்று சண்டை போட்டுள்ளார்…!
ஆனாலும் கணவன் திருந்தியபாடில்லை. ஒரு நாள் தனது வீட்டிற்கே முதலாளி மனைவியை வரவைத்துவிட்டார் அணில்.
இதன்  காரணமாக சண்டை போட்டுவிட்டு கிளம்பி விட்டார் திரிவேணி.  இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனிடையே மனைவி திரிவேணியை சமாதானம் பேசி அழைத்துள்ளார்.
அதன் பின்னர் திரிவேணியிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரின் பெற்றோர்கள் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில்  பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திரிவேணியை கொலை செய்து வீட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.
அதனை தொடர்ந்து உடலை தோண்டி எடுத்த போலீசார் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உடலை எரித்தனர்.
பின்னர் கர்நாடக போலீசார் அணில்குமாரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.