November 23, 2016
ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய ஊழல்: ராகுல்காந்தி
ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பு விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய நிதியமைச்சருடன் கூட ஆலோசிக்காமல் ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புவதாக தெரிவித்துள்ள ராகுல், பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இவ்விவகாரம் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய ஊழல்: ராகுல்காந்தி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.