Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை



கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் வி.கே. உன்னிகிருஷ்ணன். குற்றவழக்கு ஒன்றில் இவர் மீது நீதிமன்றில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
பிணையில் வெளிவந்த அவர் கர்நாடக மாநிலத்துக்கு தப்பி ஓடினார். அங்கு அவர் குடிபோதையில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6-ந் திகதி கர்நாடக பொலிசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கேரளா அழைத்துவரப்பட்டார்.

 

இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் கேரள ஐகோர்ட்டு உன்னிகிருஷ்ணனை நீதிபதி பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதில் மனமுடைந்த உன்னிகிருஷ்ணன் நேற்று காசர்கோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.