Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

திருப்பூர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டம்



திருப்பூரில் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்காதவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டதாக செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 'பாய்ன்ட் ஆப் சேல் (பிஒஎஸ்)' என்ற புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டையின் பதிவேடு எண்கள் பிஎஸ்ஓ இயந்திரத்தில் பதிவு செய்து மின்னணு முறையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதில், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு பொருட்கள் விநியோகித்த உடன் அந்த செல்பேசிக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு விடும்.
இதன் மூலம் ஒருவரின் குடும்ப அட்டையை பயன்படுத்தி மற்றொருவர் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படும்.திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான பயனாளிகளின் செல்பேசி எண்கள் பாய்ன்ட ஆப் சேல் கருவியில் இணைக்கப் பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு மங்கலம் ரோடு, வெடத்தலாங்காடு பகுதியில் வளர்மதி கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்காத சிலருக்கும் பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் சென்றது. இதையறிந்த குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட கடையில் கூடி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘பொருட்கள் எதுவும் வாங்காதவர்களுக்கு வாங்கியதாக செய்தி வந்தது. கடையில் வந்து இருப்பு நிலவரம் கேட்டால், அனைத்து பொருட்களும் தீர்ந்து விட்டது என பதில் கூறப்படுகிறது’ என்றனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
g

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.