November 23, 2016
பிட்டு துணி கூட இல்லாமல் தான் இனி குடிப்பதற்கு போகணும்..! அட எந்த ஊர்லங்க…?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து மது அருந்த அனுமதிக்கும் புதிய மொட்டைமாடி நிர்வாண பார் ஒன்று திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிர்வாண பாருக்கு போவதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் இருக்கிறதாம்.
லண்டனில் பிக்பான் எதிரில் அமையவிருக்கும் இந்த ஸ்பெஷல் பாரில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் நிர்வாகத்தினர் ஒருங்கிணைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் வாடிக்கையாளர்கள் வெயில்காயும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். மட்டுமின்றி இந்த மதுபான விடுதியானது நிர்வாண கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒருபகுதியாக இருக்கப் போவதில்லை என்கிறார்கள்.
வெளிவரவிருக்கும் ஒரு புதிய தொலைக்காட்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த நிர்வாண மதுபான விடுதியை ஒருங்கிணைத்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நிர்வாணமாக ஆடலாம் ,பாடலாம் குளிர் காயலாம்.
சுதந்திர சிந்தனையுடன் கட்டுப்பாடுகள் இன்றி எந்த நிகழ்ச்சிகளையும் காணும் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குவதே நோக்கம் என தெரிவித்துள்ள இந்த மதுபான விடுதியின் நிர்வாகிகள். அதே நேரம் பரந்த மனபான்மையுள்ளவர்கள் தான் இங்கு வருவார்கள் என்கிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்குதல் என்பதை மனதில் கொண்டே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் கலாசார சீர் கேடுகள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை என்றும் கூறுகிறார்கள்.
கோடை காலம் முழுவதும் குறிப்பிட்ட நாட்களில் இந்த மொட்டைமாடி நிர்வாண மதுபான விடுதி இயங்கும் என தெரிவித்துள்ள நிர்வாகிகள், இங்கு மது அருந்த வேண்டும் எனில் குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மின் அஞ்சலில் தெரியப்படுத்தும் விவரங்கள் அவர்களது கொள்கையுடன் ஒத்துப்போவது அறிந்தால் கண்டிப்பாக குறிப்பிட்ட நாளில் வந்து நிர்வாணமாக அமர்ந்து மது அருந்த அழைப்பு விடுப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.
பிட்டு துணி கூட இல்லாமல் தான் இனி குடிப்பதற்கு போகணும்..! அட எந்த ஊர்லங்க…?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.