Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

ஸ்டாலின் சென்ற கார் திடீர் விபத்து. பரபரப்பு தகவல்



தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் சென்ற கார் லேசான விபத்துக்குள்ளாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரியில் நாளை நடைபெறவுள்ள திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் திரும்ப முயன்ற மற்றொரு கார், ஸ்டாலின் சென்ற காரின் மீது உரசியது. இதனால், ஸ்டாலின் சென்ற காரின் முன்பக்கம் சேதமடைந்தது.

அதனைத்தொடர்ந்து, வேறொரு காரில் ஏறி தருமபுரிக்கு ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். இந்த விபத்தில் யாருக்கும், எந்தவித காயமும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.