சப்பட்டையரான (அதான், நம்ம கனடா உறவுகளின் படி சீனர்) 30 வயது Cheng அவரது 29 வயது மனைவி Ting Su வின் இரணை சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என சந்தேகம் வந்து விட்டது மனைவிக்கு.வீட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு, ஜாலியாக, ஏதோ வெளியில் முக்கிய வேலை என்று கணவன் கிளம்பிய போது, ஆகா இதுல ஏதோ விஷயம் இருக்குது. இன்னைக்கு புகை வைச்சு பிடிக்கிறேன். இருடி வாறேன் என்று கருவியவாறு mobile phone tracker கொண்டு கணவனின் கார் இருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அங்கே சென்றார் மனைவி.
சூப்பர் மார்க்கெட் நிலக் கீழ் கார் பார்கிங்கில், காரை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு, வெளியில் இருந்து பார்க்க முடியாத கறுப்புக் கண்ணாடியினை ஏத்தி விட்டு, 'நிர்வாணமாக' பெரும் பிரார்த்தனையில் இருந்தது கள்ள ஜோடி.
பாவம், மனைவி வீட்டில் இருந்த spare சாவியுடன் வருவதை அறியாமல் கருமமே கண்ணாக இருந்தார் சப்பட்டையர் Cheng.
கதவை தீடீரென திறந்து, பெரும் குரல் திட்டலும், அழுகையுமாக மனைவி கார் ஓட்டுனர் ஆசனத்தில் அமர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்ய, திடுக்கிட்டுப் போன கள்ள ஜோடிகள் செய்வது அறியாது, கதவைத் திறந்து, நிர்வாண கோலமாக வெளியே இறங்கி ஓடுகையில், தமது உடலில் ஒரு துண்டு துணியும் இல்லை என புரிந்ததும் அவர்கள் நீண்ட தூரம் ஓட முடியாமல், அங்கிருந்த கார்களுக்குப் பின் பதுங்கினார்கள்.
மனைவி காரை எடுத்துக் கொண்டு செல்கையில், காரை நிறுத்தி, தனது செல் போனில் தனக்கு துரோகம் இழைத்த, கணவனையும், தனது இரட்டை சகோதரியினையும் அவர்கள் இருந்த நிர்வாண கோலத்திலேயே படம் பிடித்து, பின்னர் காருடன், அவர்களது உடைகள் உள்ளே இருக்கக் கூடியதாக சென்று விட்டார்.
சிவந்த முகத்துடனும், நிர்வாண உடலுடனும் ஜோடிகள் அங்கே நின்ற காட்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது என்றார், அவர்களைப் கண்டு களிக்க, திரைகடல் என கூடிய கூட்டத்தில் இருந்த ஒருவர்.. அன்று சொப்பிங் வந்த பலர், இந்த கள்ள ஜோடிகளின், திருக்கோலத்தினை தமது போன்களில் கிளுக்கிக் கொண்டார்கள்.
மனைவியோ இவர்களது படத்தினை youtube ஏத்த உலகெங்கும் இப்போ இதுதான் ஹிட் என்பதுடன், கள்ள ஜோடிகளுக்கு 'எதுக்கும் ஒரு செட் உடுப்பினை காருக்கு கீழே வைத்து விட்டு' கூத்தினை தொடங்க வேண்டும் என்ற ஒரு நல்ல பாடம் கிடைத்து உள்ளது.
மறக்கவே முடியாத படிப்பினையினைப் பெற்றுக் கொண்ட ஜோடிக்கு பிறகு என்ன நடந்தது எண்டு சொல்லாட்டி, விடவா போறியள், இங்க கேள்வி கேட்டு, பதில் வரும் வரை நித்திரை கொள்ளாமல் தவிச்சுக் கொண்டிருப்பியல் எண்டபடியால் அதையும் சொல்லலாம்,
அவயள போலீஸ் காரர் தங்கண்ட காரில கொண்டு போய் விட்டினமாம். - உடுப்பு இல்லாமல் தான். சப்பட்டையர் Cheng எங்க போனார், தண்ட வீட்டுக்கோ, மனிசி கதவை திறந்தவவோ எண்டு எல்லாம் கேட்கக் கூடாது பாருங்கோ..
ஏனென்டா, மனிசி அடுத்த நாளே டிவோசுக்கு கொடுத்திட்டா..
ஆகா, அருமையான தண்டனை துரோகிகளுக்கு என சமுக வலைத் தளங்கள் மூலம் உலெகெங்கும் இருந்து மனைவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. கார் எல்லாம் ஆபத்து, இங்கே வாங்களேன், பாதுகாப்பாக 'கதைத்துப் பேச' என சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்கிறது.
அந்த படங்களையும் பார்த்துக் கொண்டு, எங்க உங்கட சர வெடிகளை பதியுங்கோவன்.
இது நடந்தது, தென் சீனாவில்.
விரைந்து செல்லும் மனைவியிடம், உடுப்பினை தந்து விட்டுப் போ என்று கதறும் கணவன், சப்பட்டை சிங்கன்
எதனை மறைப்பது, பெரும் அவமானத்தில், முகத்தினை மறைக்கும், அக்காவின், கணவனின் கள்ளக் காதலி.
என் அத்தார் தானே, இப்படி பரிசு கெடுக்கலாமா உன் தங்கையை என்று சொல்கிறாரோ?



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.