November 5, 2016
உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை..! இப்போது இளைஞரின் கதி என்ன தெரியுமா?… பகீர்..!!
தன்னுடைய உயரத்தை அதிகரிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் தீடீரென படுத்த படுக்கையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் நிகில் ரெட்டி. இவர் தனது உயரம் இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பிரபல குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்காக அவர் சுமார் 4 லட்சம் செலவு செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், நிகில் திடீரென தீராத வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நிகில் தனது வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.
மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக தான் நிகிலின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால்தெலங்கானா மாநில மெடிக்கல் கவுன்சில் இந்த பிரச்சனையை தானாக முன்வந்து விசாரித்தது.
இதனையடுத்து நிகில் ரெட்டியின் இந்த அவல நிலைக்கு மருத்துவமனையும், தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும் தான் காரணம் என்பதை மெடிக்கல் கவுன்சிலின் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தும், நிகிலின் உடல் நிலை சீராகும் வரை, அவரின் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் மருத்துவமனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை..! இப்போது இளைஞரின் கதி என்ன தெரியுமா?… பகீர்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.