November 15, 2016
பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து நடிகர் விஜய் கேள்வி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள நடிகர் விஜய், எனினும் மக்கள் சந்தித்து வரும் சிரமங்கள் வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்தார். இது மிகவும் துணிச்சலான முயற்சி என்று பாராட்டு தெரிவித்துள்ள அவர், இந்த முயற்சி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறினார்.
எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களில் ஒரு சில சதவீதத்தினர் செய்யும் தவறுக்காக 80 சதவீத ஏழைகள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கும் விஷயம் என்றும் விஜய் தெரிவித்தார்.
மருந்து வாங்க பணம் இன்றியும், திருமணம் நடத்த முடியாமலும் மக்கள் சந்தித்த சிரமங்களைக் கேள்விப்பட்ட போது, மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் கூறினார். முடிவை அறிவிக்கும் முன்பாக, இன்னும் சிறப்பாக திட்டமிட்டிருந்தால், பாதிப்பை குறைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், நிலைமை சீரடைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக விஜய் தெரிவித்தார்
பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து நடிகர் விஜய் கேள்வி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.