Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 1, 2016

டேய் கிருஷ்ணமூர்த்தி இட்லி ஆர்றது பார்'



'டேய் கிருஷ்ணமூர்த்தி இட்லி ஆர்றது பார்'

'தோ வர்றேம்மா '

அரைமணிநேரமா இவன் பார்த்த கண்ணாடிக்கு கண்டிப்பா ரசம் போயிரும்..

'அம்மா கிருஷ்ணமூர்த்தி'ன்னு கூப்பிடாத ஷார்ட்டா 'கிருஷ்'ன்னு கூப்பிடு'

' கிருஷ் பிரெஷ்'ன்னெல்லாம் கூப்பிட முடியாது அது உங்க தாத்தா பேரு'

'அப்பாக்கே வயசு ஐம்பதைத் தொடுது அவரோட அப்பா பேரு
' டூ ஓல்டு நேம் ஐ டோண்ட் லைக் இட்'
'இனி நான் கிருஷ் ' ஒருமனதாய் தீர்மானம் நிறைவேற்றியது மனது...

'ஏம்மா எப்ப பார்த்தாலும் இட்லி'ய போட்டு சாவடிக்கிற'

'டேய் ரொம்ப பேசாதே இதுக்கெல்லாம் சேர்த்தார் போல ஒருத்தி உனக்கு வரத்தானே போறா' பார்வதி சொன்ன வினாடியில் நேற்று பெசன்ட் நகர் டிப்போவில் பார்த்த பெண்ணின் இல்லை இல்லை தேவதையின் முகம் மனதில் நிழலாடியது .இன்னிக்கும் எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் மகிழ்ச்சியில் வழக்கமாய் போகும் ஐந்து இட்லியில் ரெண்டு இட்லி போக மறுத்து ஸ்ட்ரைக் பண்ணியது..

'என்ன கலர் சட்டை போடலாம்?'

'இந்த சட்டைக்கு வாட்ச் போடலாமா வேண்டாமா ?'

'இன்னிக்கு ஜீன்ஸ் போடக்கூடாது'? இவன் எலியாகவும் மனசு பூனையாகவும் இருந்தது..

ஒரு உதையிலேயே பைக் ஸ்டார்ட் ஆக‌ அவ‌ன் க‌ற்ப‌னை குதிரையையும் சேர்ந்துக் கொண்டு ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து..அன்னிக்கு எல்லோரும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ தெரிந்தார்க‌ள் எதிர்ப்ப‌ட்ட‌ பிச்சைக்கார‌னுக்கு இருப‌து ரூபாய் போட்ட‌து கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்..


இதோ இன்னும் கால்ம‌ணி நேர‌த்திற்குள் போயிர‌லாம் எப்ப‌டியும் அவ‌ள் வ‌ருவாள் அட்லீஸ்ட் மொபைல் ந‌ம்ப‌ராவ‌து வாங்கிட‌னும் 'உறுதிமொழி ப‌டுஸ்ட்ராங்கா இருந்த‌து..


கிறிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ப‌ட்...


க‌ற்ப‌னையிலே வ‌ந்த‌வ‌னுக்கு எதிரில் வ‌ந்த‌ சைக்கிள்கார‌னை தெரிய‌வில்லை மோதிய‌தில் கையில் கிளை பிரித்து ர‌த்த‌ம் ஓடிக்கொண்டிருந்த‌து..


சைக்கிள்கார‌ன் 'சாவுக்கிராக்கியில்' ஆர‌ம்பித்து 'நாச‌மாபோக‌' வ‌ரைக்கும் திட்டிக் கொண்டே சென்றான்..


கைவ‌லியோடு மொபைலில் சுரேஷைக் கூப்பிட்ட‌தும் ப‌த்து நிமிஷ‌த்தில் வ‌ந்தான்.பைக்கில் போய்க் கொண்டிருக்கும்போதே 'டாக்ட‌ர் விஷ்ணுப்பிரிய‌ன்'என்ற‌ க்ளினிக் க‌ண்ணில்ப‌ட‌ அங்கே போனார்க‌ள்..


'ஒரு இன் ஜ‌க் ஷ‌ன் எழுதுறேன் அதோடு ரெண்டு டேப்ள‌ட்.. மெடிக்க‌ல்'ல‌ வாங்கிட்டு வெயிட் ப‌ன்னுங்க‌' சுரேஷ் போய் வாங்கி வ‌ந்தான்.


'இங்க‌ யாரு கிருஷ்'?


குர‌ல் வ‌ந்த‌ திசையை பார்த்தான்..
ப‌ளிச் ப‌ளிச் மின்ன‌ல்.... இடி...... மாறி மாறி அடித்த‌து ம‌ன‌சுக்குள்.... ப‌ஸ் டிப்போவில் பார்த்த‌ அதே பொண்ணு ஸாரி தேவ‌தை.. இவ‌ள் ந‌ர்ஸா?


 'உள்ள‌ வாங்க‌'........ போனான்.


'அந்த‌ க‌ட்டில்'ல‌ ப‌டுங்க‌'


'எதுக்கு?'


'எதுக்கா இன் ஜ‌க் ஷ‌ன் போட‌ வேண்டாமா?'


'கையில‌ போடுங்க‌'


'நீங்க‌ ரொம்ப‌ ஓல்லியா இருக்கீங்க‌ உங்க‌ உட‌ம்புக்கு இடுப்புல‌ தான் போட‌ முடியும் இடுப்ப‌க் காட்டுங்க‌'


சைட் அடிக்க‌ வ‌ந்த‌ பொண்ணே ந‌ர்ஸா.......... அதுவும் இடுப்புல‌ ஊசி....


எ..ன்ன்ன‌ கொடு..ம்ம்ம‌ சார் இது.........

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.