Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 22, 2016

தேவநாகரி எழுத்துகள் பற்றி நேரு தந்த உறுதிமொழி புதிய ரூபாய் நோட்டில் மீறப்பட்டதா?


இந்திய  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் முதல் முறையாக தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதை  எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பினாய் விஸ்வம்  உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் " மக்களிடையே புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, 2000 ரூபாய் தாள்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளன. 500 ரூபாய் தாள்களும் தற்போது புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளன.இந்த இரண்டு ரூபாய் தாள்களின் வடிவமைப்பிலும், வழக்கத்துக்கு மாறாக, தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, 343(1)-வது சட்டப் பிரிவுக்கு முரணானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் 25-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள  ஐகோர்ட் கிளையில் கேபிடி.கணேசன் என்பவர் "இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய தாள்கள் இரண்டுமே இந்திய அரசியல் சாசனத்தை மீறி தேவநாகரி எழுத்துருக்களை பயன்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய்தாள்களில் எந்த ஒரு மாற்றம் செய்யவேண்டுமானலும் பாராளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் வாங்கி அதன் பின் ஜனாதிபதியின் ஒப்புதலுடனேதான் மாற்றம் செய்யமுடியும் என்பது சட்டம். ஆனால் தற்போது புதிய ரூபாய் தாள்கள் வெளியாகியுள்ளன. இந்தியா குடியரசு ஆன ஜனவரி 26-ம் தேதி வெளியான அரசியலமைப்பு பிரிவு 343 சர்வதேசத்துக்கும் புரியம் வகையில் இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. அப்போதே இந்திய ரூபாயில் தேவநாகரி எழுத்துக்களை சேர்க்க முனைந்த போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 13 ஆண்டுகள் கழித்து நேரு காலத்தில் மீண்டும் மாற்றம் செய்ய முனைந்த போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின் மற்ற மாநிலங்கள் விரும்பும் வரை இந்நிலை தொடரட்டும் என நேரு தெரிவித்துவிட்டார். தற்போது இந்திய அரசியல் சட்டத்தையும் மீறி, நேரு பாராளுமன்றத்தில் கொடுத்த உறுதி மொழியையும் மீறி தேவநாகரி எழுத்துடன் ரூபாய்தாள்களை வெளியிட்டுயுள்ளனர். இந்திய அரசு அலுவல் மொழிச்சட்டத்திற்கு எதிரான இந்த ரூபாய்தாள்களை செல்லாது என அறிவிக்க கோரி  இன்று நான் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் முரளிதரன் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இது குறித்து மத்திய நிதித்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்"என்று தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா,கர்நாடகா, கேரளா,தெலுங்கான,ஒடிசா, வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு உள்ளது. தமிழககத்தில் பல்வேறு காலகட்டங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உணர்வுப்பூர்வமாக நடந்து நிறைய பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்பது இங்கு உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். ஆனால் மத்திய அரசு எதோ அவர்கள் வீட்டு தாளில் எழுதுவது போல இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இவ்வளவு பெரிய மாற்றத்தை செய்துள்ளனர். இது தேன்கூட்டில் கல்லெறியும் வேலை. நீதிமன்ற உத்தரவு என்பதையும் தாண்டி உடனடியாக மத்திய அரசு ரூபாய் தாள்களை திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் இங்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் சூழ்நிலை உருவாகும்  "என்று கணேசன் நம்மிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.