Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

உயரத்தை அதிகரிக்க செய்து கொண்ட சிகிச்சையால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நிகில் ரெட்டி. இவர் தனது உயரத்தை அதிகரிக்க ஆசைபட்டார். தற்போது இருப்பதை விட இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆனால், நிகில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

இதற்கு காரணம் தவறான அறுவை சிகிச்சை செய்துள்ளது தான் என உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.இது குறித்து  தெலுங்கானா மாநில மருத்துவ கவுன்சில் தானாக முன் வந்து விசாரணை நடத்தியுள்ளது.

விசாரணையில் நிகில் ரெட்டியின் இந்த நிலைக்கு மருத்துவமனையும், தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும் தான் காரணம் என்பது உறுதிபட தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்ததுடன் நிகில் ரெட்டியின் உடல் நிலை சரியாகும் வரை, அவரின் முழு சிகிச்சை செலவையும் குளோபல் மருத்துவமனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மெடிக்கல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.