டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் எதிரொலியாக அடுத்த 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிப்பதற்கும் புதிய கட்டுமானப் பணிகளும் தொடங்குவதும் தடை செய்யப்படுகிறது. பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பனிமூட்டமும், புகையும் கலந்த பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று காணப்பட்ட பனிப்புகை மூட்டத்தை விட இன்று அதிகம் காணப்பட்டது. 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்த எதையுமே பார்க்க முடியவில்லை. மேலும் நகரின் மாசு குறியீட்டு அளவு 428-ல் இருந்து 825 ஆக உயர்ந்தது. இது மிகவும் கடுமையான நிலை என்று மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த அளவு அடுத்த 3 நாட்களில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் அது மிகவும் பரிதாபகரம் என்ற நிலையை அடையும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் பனிப்புகை அதிகரித்து வருவது, டெல்லி நகர மக்களை வெகுவாக கவலை கொள்ளச் செய்து இருக்கிறது.
இந்நிலையில் மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் பனிப்புகை மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியை பனிப்புகை அடைத்துக் கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதை விடுத்து இந்த தருணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும் என்றார்.
* பனிப்புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிப்பதற்கும் புதிய கட்டுமானப் பணிகளும் தொடங்குவதும் தடை செய்யப்படுகிறது.
* பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுகிறது.
* மருத்துவமனைகள் தவிர வேறு எந்த இடத்திலும் அடுத்த 10 நாட்களுக்கு கனரக ஜெனரேட்டர்களை இயக்குவது தடை செய்யப்படுகிறது.
* டிசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் அதிகாரப்பூர்வமற்றா காலனிகளுக்கு டெல்லி அரசு மின்சாரம் சப்ளை வழங்கும்.
* இதேபோல் இன்னொரு நடவடிக்கையாக பதர்பூர் அனல் மின்நிலையம் செயல்வடுவது 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
* நகரில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களில் கழிவு சாம்பல் எடுத்து செல்லக்கூடாது.
* இலைகள் எரிக்கப்படுவதை கண்காணிக்க சுற்றுச்சூழல் துறை ஒரு செயழி- யை தொடங்கும்.
* சாலைகளில் உள்ள வெற்றிடங்களை சுத்தம் செய்யும் பணியானது 10-ம் தேதி தொடங்கும்.
* நாளை டெல்லி நகரின் சாலைகள் அனைத்தும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படும்.
* பொதுப் பணித்துறையினரும் சாலைகளை சுத்தமாக துடைப்பார்கள். குப்பை கிடங்குகளில் எரியும் தீ அணைக்கப்படும்.
* எனவே பொதுமக்கள் கூடுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருப்பது நல்லது. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். முடிந்தால் பணிகளை வீடுகளில் இருந்தவாறே முடிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேவைப்பட்டால் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக மீண்டும் ஒற்றை, இரட்டைப்படை பதிவு எண் கொண்ட கார்களை முறை வைத்து இயக்கும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே, காற்றில் மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுகாதார அவசர நிலையை டெல்லியில் அறிவித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சுகாதார அறிவுரை குறிப்புகளை உடனடியாக வெளியிடவேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.