Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 19, 2016

ரூ. 500, 1000 நோட்டு செல்லாது அறிவிப்பு பிரதமர் மோடியை கிண்டல் செய்த சீன பத்திரிகை


இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து விட்டது.
தங்களிடம் உள்ள பழைய  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழு வதும் வங்கிகள் முன்பு மக்கள் காத்து கிடக்கிறார்கள்.

இதே போல் இருப்பில் உள்ள பணத்தை வங்கியில் போடவும், எடுக்கவும் கூட் டம் அலை மோதுகிறது. இதனால் நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். மையங் களில் எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்கள்.

நோய் வாய்ப்பட்டவர்கள், முதியோர், பெண்களும் வரிசையில் காத்து கிடக் கிறார்கள். இதனால் அவர்கள் பல அசவுகரியங்கள் இன்னல் களுக்கு ஆளாகி உள்ளனர்.இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

ரூ. 500, 1000 நோட்டு செல்லாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது.

சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

'மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி, ஒரு காஸ்ட்லி அரசியல் ஜோக் என சொல்லலாம். தைரியமான முடிவுகளை எடுக்கும்போது, அதை செயல்படுத்த போதிய ஞானம் வேண்டும். மக்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதில் மோடி அரசு தோற்றுவிட்டது.

குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அப்பத்திரிகை தன்னுடைய கடும் விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.