November 20, 2016
ரூபாய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டிவிட்டது
ரூபாய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டிவிட்டது
இந்தியாவில் மோடி அரசு கருப்பு பணத்திற்கு எதிராக நடத்திய Surgical Strike தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிவிட்டது. இதில் ஆயிரம் கோடிகளை சுருட்டிய எந்த பண முதலைகளும், அரசியல்வாதிகளும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். இதில் பலியானவர்களின் விவரத்தை HuffPost India சேகரித்து பட்டியலிட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்கள் தான் . அதில் முதியவர்கள், வைப்பக அதிகாரிகள், காவலர்கள், உடனடியாக பணத்தை மாற்ற முடியாமல் மன உளைச்சலுக்குள்ளான சாமானியர்கள் தான் அதிகம்.
இந்த நடவடிக்கையினால் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படப்போகிற பொருளாதார நன்மைகளையும், தீமைகளையும் பற்றிய விவாதத்தை ஒரு புறம் வைத்து விட்டு. இதை பா.ஜ.க அரசு எப்படி சந்தைப்படுத்துகிறது என்று தான் கவனிக்க வேண்டும்.
மக்களுக்கும், மாநிலங்களுக்கும் அறிவிக்காமல், முறைப்படி முன்னெச்சிரிக்கையாக எந்த ஒரு ஆயுத்தங்களையும் செய்யாமல் எடுக்கும் விபரீத நடவடிக்கைகளை Surgical Strike என்று அழைப்பதை விட அதை ஒரு Surgical error என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
நாடு முன்னேற வேண்டும் என்றால் மக்கள் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல எந்த ஒரு அரசியல்வாதிக்கும் உரிமையில்லை. கருப்பு பணத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்றால், அதை கருப்பு பணம் அதிகம் புலங்கும் முதலாளி வர்கத்தின் கஜானாவில் இருந்து தொடங்கவேண்டும். அதை விட்டு விட்டு நாளுக்குநாள் வரும் வருமானத்தை நம்பி வாழும் பெரும்பாண்மையான எளிய மக்களின் அன்றாட சேமிப்புகளில் இருந்து ஆரம்பிக்க கூடாது! மோடி அரசின் இந்த தாக்குதலில் பலியான உயிர்களுக்கு மோடி அரசு பொறுப்புக்கூற வேண்டும்!
ரூபாய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டிவிட்டது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.