சாத் பூஜா விழாவின் கொண்டாட்டத்தில் பாலிவுட் மற்றும் போஜ்புரி பாடல்களுக்கு 4 பெண்கள் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். முதியோர்களும் நடன அழகிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் ஒழுக்கமீறல் வழக்கு பதிவு செய்தனர்.
மும்பையில் கடந்த ஞாயிற்று கிழமை, சாத் பூஜா விழா நடைப்பெற்றது. பெண்கள் சூரிய கடவுளை வாழிபாடு செய்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 7 மணி அளவில் சுமார் 2000 பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் 4 பெண்கள் பாலிவுட் மற்றும் போஜ்புரி பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடினர். இரவு 9 மணி கடந்ததும் முதியோர்களும் நடன அழகிகளுடன் சேர்ந்து மேடையில் ஆட்டம் போட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த மகாராஷ்டிரா மாநில சேனா அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடன அழகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.