Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சித்தியை வெட்டிக்கொலை செய்த மகன்..!



தூத்துக்குடி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சித்தியை, மகன் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான் கிராமத்தைச் சேர்ந்த அருமை நாயகத்தின் முதல் 2 மனைவிகள் பிரிந்து சென்றதால் 3வது திருமணம் செய்ய முடிவுசெய்து பெண் தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக பெண் பார்க்க வரும்படி தனது தந்தையின் இரண்டாவது மனைவியான லட்சுமியை அழைத்துள்ளார். இதற்கு லட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருமைநாயகம் தனது, சித்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அருமை நாயகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.