November 9, 2016
விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காணாத அரசு; 3,600 கோடியில் சிவாஜிக்கு சிலை! வீடியோ
விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காணாத அரசு; 3,600 கோடியில் சிவாஜிக்கு சிலை! எடுப்பது பிச்சை வாய் கொப்பளிப்பதற்கு பண்ணீர்.....
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடப்பாண்டில் இதுவரை 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக மகராஷ்டிரா மாநிலத்தில் மரத்வாடா பகுதி வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத கிராமங்களே மராத்வாடா பகுதியில் கிடையாது.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க மகாராஷ்ட்ரா அரசு எடுத்த முயற்சிகள் எடுக்கவும் இல்ல. விவசாயிகளின் துயரைத் துடைக்க வழியை தேடியதாகவும் தெரியவில்லை. மண்ணின் மைந்தன் நானா படேகர் போன்ற தனிமனிதர்கள்தான் மக்கள் மீது அக்கறை கொண்டு தங்கள் சொந்த பணத்தையும் நிதியையும் திரட்டி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், தினம் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் மகராஷ்டிரா, மராட்டிய மன்னர் வீர சிவாஜிக்கு ரூ. 3,600 கோடி செலவில் சிலை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டு அரபிக் கடலுக்குள் வீரசிவாஜிக்கு சிலை நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு 100 கோடியில் சிலை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. தெற்கு மும்பையின் சவுப்பாத்தி பகுதியில் அரபிக் கடலுக்குள் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் சிலை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
கடலுக்குள் சிலை அமைக்கப்பட்டால், மீன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சிவாஜி சிலை அமைப்பதற்காக சிறப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து,. கடந்த அக்டோபர் 26ம் தேதி கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது.
சுமார் 100 கோடியில் தீட்டப்பட்ட இந்த திட்டம், 2007ம் ஆண்டு 700 கோடியாக உயர்ந்தது. 2009ம் ஆண்டு 1,400 கோடியாகவும் தற்போது 3,600 கோடியாகவும் செலவுத் தொகை அதிகரித்துள்ளது. அதாவது திட்டமிட்டதை விட 35 மடங்கு அதிகமான செலவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி நிறைவுற்றால் இந்தியாவிலேயே உயரமான சிலையாக இது இருக்கும்.
தற்போது குஜராத் அரசு எழுப்பி வரும் சர்தார் வல்லபாயின் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இதன் கட்டுமானப்பணிகள் 2018ம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் வல்லபாயின் சிலையை விட, 8 மீட்டர் அதிகமாக, 190 மீட்டர் உயரத்தில் வீர சிவாஜி சிலை அமையும். இந்தியாவில் தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள வீர அபய ஆஞ்சநேய ஹனுமானின் சிலைதான் உயரமானது. இது 41 மீட்டர் உயரம் கொண்டது.
விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு மாநிலத்தில் இவ்வளவு அதிகமான செலவில் மன்னர் சிவாஜிக்கு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மகராஷ்டிர அரசு சிலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது.
மாமன்னர் வீரசிவாஜி மக்களை உண்மையாக நேசித்தவர். தனது ஆட்சி காலத்தில் மக்களை பாதுகாக்க துயர் துடைக்க எத்தகைய வீரச் செயலையும் செய்யத் துணிந்தவர். மராட்டியத்தில் தனது மக்கள் தற்கொலை செய்து கொள்வதை சிவாஜி விரும்புவரா? அல்லது தனக்கு சிலை அமைப்பதை விரும்புவரா?
விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காணாத அரசு; 3,600 கோடியில் சிவாஜிக்கு சிலை! வீடியோ
Reviewed by மறத்தமிழன்
on
November 09, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.