பேஸ்புக்கில் பழகிய இளம்பெண்ணை முதன்முறை நேரில் பார்த்ததும் குத்திக் கொன்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய - ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரும், கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் முகநூலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
தொடர்ந்து இருவரும் தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், இளம் பெணிடம், இளைஞர் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு இளம் பெண் சம்மதிக்கவில்லை.
மேலும் இளைஞர் உடனான தொடர்பையும் இளம்பெண் துண்டித்தார்.
பின்னர், இளம் பெண் செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு மீண்டும் தனது தொடர்பை புதுப்பித்துள்ளார்.
இதற்கிடையில், இளைஞர் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு இளம் பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, பேருந்து திரிப்பிடத்தில் சந்திக்கலாம் என இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல் முறையாக தனது பேஸ்புக் தோழி இளம் பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது தனது காதலை தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டுள்ளார்.
ஆனால் இதனை இளம் பெண் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர் அருகில் கிடந்த ஒரு கண்ணாடி போத்தலை எடுத்து உடைத்து இளம் பெண்ணின் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞரை காவற்துறை கைது செய்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.