Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் ரூ.2000 நோட்டு. அதிர்ச்சியில் மத்திய அரசு



ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அழிக்க மத்திய அரசு முடிவெடுத்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் தீவிரவாதிகளிடம் நடமாடுகிறது என்பதுதான். ஆனால் புதியதாக அச்சடித்த இரண்டு ரூ.2000 நோட்டுகள் இன்று கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியபோது, 'இந்த ரூ.2000 நோட்டுகள் தீவிரவாதிகளுக்கு எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.  இவர்கள் தோற்றத்தைப் பார்க்கும் போது அயல்நாட்டுக்காரர்களாகத் தெரிகிறது. இவர்கள் எப்போது காஷ்மீருக்குள் நுழைந்தனர் என்பது விரைவில் தெரியவரும்” என்று கூறினார்.
இதுகுறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியபோது நானே நான் ரூ.2000 நோட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை, ஆனால் அதற்குள் தீவிரவாதிகளின் கைக்கு சென்றது எப்படி என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.