Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

டிசம்பர் 1 சம்பளம்…!! பெரும் கலவரம்..போராட்டம்..? தெருவிற்கு வரப் போகும் இந்தியா? சந்திக்காத கொடூரம்



பொருளாதார வல்லுனர்களும் ,சில பத்திரிகைகளும் சொல்வதை, எழுதுவதைப் பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது..! நவம்பர் எட்டாம் தேதி அந்த செல்லாப் பணம் பற்றி  அறிவித்தார் பிரதமர்.
கிட்டத்தட்ட இருபது நாட்களை கடந்தும் மக்கள் கால் கடுக்க வங்கி வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். ஆயிரக் கணக்கான பணம் எடுக்கும் இயந்திரங்கள் பூட்டிக் கிடக்கின்றன.

இருக்கும் சில மெசின்கள் முன் மக்கள் பணம் எடுக்க தவம் கிடக்கின்றனர். ஐநூறு ரூபாய் புழக்கத்திற்கு வந்து ஓரிரு நாட்களே ஆகிறது…!
இன்னும் இரண்டு நாட்களில் தனியார்துறைகள், அரசுத்துறை..மற்றும் வியாபார கம்பெனிகள்…கடை முதலாளிகள் மாதச்சம்பளம் கொடுத்தாக வேண்டும்.
அரசுத்துறை, வங்கிகளில் பணம் போட்டுவிடப் போகிறது. தனியார்துறைகள் என்ன செய்யப் போகிறது. தங்கள் ஊழியர்களுக்கு பணம் எப்படிக் கொடுக்கும்.
கம்பெனிகள் எப்படி கொடுக்கும்..?  சிறு வணிகர்கள் எப்படி கொடுப்பார்கள்..? புது ஐநூறு,இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்போம் என்றால்..அவ்வளவு கரன்சிகள் இன்னும் அடிக்கவே இல்லை..!
சரி காசோலைகளாக கொடுப்பார்கள் என்றால் அதை வாங்கும் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் இருக்கிறதா..? அல்லது வங்கி கணக்குகள் உயிரோடு இருக்குமா ?
சரி மொத்த மக்களும் பணம் எடுத்தால்தான் அந்த மாத வாழ்க்கையை ஓட்ட முடியும். அவர்கள் அனைவரும் வங்கி வாசலில் தானே கூடி ஆகவேண்டும். வங்கிகளில் அவ்வளவு கரன்சிகள் இருக்கிறதா..?
இல்லை என்பதே நிதர்சனம்..! அப்படியானால் மக்கள் கடும் கோபம் கொண்டு வீதிகளில்போராட்டத்தில்   இறங்கினால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்.?
ஆனால், மக்கள் போராடுவதை தடுக்கவோ..அடக்கவோ முடியாது என்பது கசப்பான உண்மை..!!  இதை மத்திய அரசு எப்படி எதிர் கொள்ளப் போகிறது…?
மில்லியன் டாலர் கேள்விகள்..விடை  தான் கண்ணுக்கு தென்படவே இல்லை…!!
பயமாக இருக்கிறது..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.