Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

2000 ரூபாய் நோட்டை கலர் ப்ரின்ட் அடித்து பொருட்கள் வாங்கிய 13 வயது சிறுமி


நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் கறுப்புப்பணம் மற்றும்  கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிப்பதற்காக ஏற்கனவே புழக்கத்தில் விடப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கூறியது. எண்ணிக்கை அளவில்  400 கோடி கள்ள நோட்டுகள் நாட்டில் புழகத்தில் இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு(NIA) ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதிக மதிப்புடைய இந்த நோட்டுகளின் தடையால் கறுப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ, கள்ள நோட்டுகள் நிச்சயம் ஒழியும். பழைய நோட்டுகளில் இருந்து பாடம் கற்ற அரசு, புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தும் போது பல  பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், புதிய நோட்டுகள் அச்சடிக்கப் போதிய நேரம் இல்லாததால், புதிய நோட்டுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தவில்லை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில்,  புதிய 2000 நோட்டு போலவே போலி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கினறன. இதன் உச்சமாக கேரள மாநிலம் திரிச்சூரில் 13வயதான சிறுமி போலி 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

 புதிய 2000 ரூபாய் நோட்டினை இன்னும் பல லட்சகணக்கான மக்கள் பார்க்கவில்லை. பிடிபட்ட சிறுமியிடம் போலீஸார் விசாரித்ததில், வீட்டில் பயன்படுத்தும் ஸ்கேனர் மூலம் ஒர்ஜினல் 2000 ரூபாயினை ஸ்கேன் செய்து கலர் பிரிண்டர் மூலம் போலி 2000 ரூபாயினை அச்சடித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.  போலி நோட்டினை கொடுத்து ஒரு கடையில் 500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி, மீதி 1500 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.



அந்தக் கடைகாரரிடம் சில்லரை இல்லாததால், அருகில் இருந்த பேக்கரிக்கு சில்லரை மாற்றச் சென்றுள்ளார். பேக்கரி உரிமையாளருக்கு அந்த நோட்டினை பார்த்தவுடன் சந்தேகம் வர, உடனே காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போலி நோட்டினை கைப்பற்றியதுடன், அச்சிறுமியையும் கைது செய்தனர் என மாத்ரூபூமி  செய்தி வெளியிட்டு இருக்கிறது

 2000 ரூபாய் நோட்டு மக்களிடம் புழக்கத்தில் வந்த இரண்டாவது நாளே போலி நோட்டுகள் வெளிவந்தன. கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் பிரிண்டரில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, கடையில் 1700 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ப்ரிண்டர் மூலம் 2000 ரூபாயினை அச்சடித்த  ஜெராக்ஸ் கடை உரிமையாளட்கள் சந்தீப் குமார், ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், டாஸ்மாக் கடையில் ஜெராக்ஸ் 2000 ரூபாய் கொடுத்து, ஒருவர் 300 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிவிட்டு 1,700 ரூபாய் சில்லரையையும் வாங்கிச் சென்றுள்ளார்.

 மக்களே உஷார் உஷார்..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.